கோப்புப்படம்  ANI
இந்தியா

மசோதாவுக்கு ஆதரவளித்தால் பிகாரில் நிதீஷ் தோல்வி அடைவார்: கபில் சிபல்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவது பற்றி...

DIN

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவளித்தால் பிகார் பேரவைத் தேர்தலில் தோல்வி அடைவார்கள் என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடனான ஆலோசனையில், வக்ஃப் மசோதாவை எதிர்ப்பது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞரும் எம்பியுமான கபில் சிபல் பேட்டி அளித்துள்ளார்.

அவர் பேசியதாவது:

”வக்ஃப் மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்து நிறைவேற்ற ஆளும் கட்சி முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு மதத்திலும் சீர்திருத்தம் அவசியம். சீர்திருத்தம் என்பது நல்ல விஷயம்தான். ஆனால், பின்னணியில் உள்ள நோக்கம் என்ன? 2014 முதல் குறிப்பிட்ட ஒரு மதத்தை குறிவைக்கப்படுவதை நாம் கண்டுள்ளோம்.

நாட்டில் மதசார்பற்ற கட்சி யார் என்பது இன்று தெரியவரும். பிகாரில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் மசோதாவுக்கு ஆதரவளித்தால் தோல்வியை சந்திக்கும். அதனால், பாஜக எளிதில் மசோதாவை நிறைவேற்றுவதற்காக ஐக்கிய ஜனதா தளம் வெளிநடப்பு செய்ய வாய்ப்புள்ளது. சிராஜ் பாஸ்வானும் இதையே பின்பற்றுவார் என்று நினைக்கிறேன்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று!

திருச்செந்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

கிராவல் மண் திருடியவா் கைது

தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

கோயில் திருவிழா விவகாரம்: கிராம மக்கள் தா்னா

SCROLL FOR NEXT