முகப்பு
இந்தியா

மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்!

கெய்புல் லாம்ஜாவோ பகுதியில் பாதுகாப்புப் படையினர் ஆயுதங்கள் மீட்டனர்..

Updated On : 5 ஏப்ரல், 2025 at 7:12 AM
ஆயுதங்கள் பறிமுதல்
பகிர்:

மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் பறிமுதல் செய்தனர்.

விஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள கெய்புல் லாம்ஜாவோ காவல் நிலையத்திற்கு உள்பட்ட லைசோய் மலைப் பகுதிகளிலிருந்து பாதுகாப்புப் படையினர் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை மீட்டனர். மீட்கப்பட்ட பொருள்களில் எஸ்எல்ஆர் துப்பாக்கிகள், கார்பைன்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவை அடங்கும்.

அதேபோன்று இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள லைடோஞ்சம் திலீப் சிங் என்பவரை அவரது வீட்டிலிருந்து கடத்தியதில் தொடர்புடைய குந்த்ரக்பம் ராகேஷ் சிங் என்ற தோம்பா, குந்த்ரக்பம் சார்லஸ் ஆகிய இரண்டு பேரைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். கடத்தப்பட்டவர் மீட்கப்பட்டார், மேலும் சந்தேக நபர்கள் விஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நம்போல் ஃபோஜிங் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டனர்.

மேலும் தௌபல் மாவட்டம், கோங்ஜோம் பகுதியில் மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட கே.சி.பி (பி.டபிள்யூ.ஜி)யைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளான அஹோங்சங்பாம் நவோபி சிங், டோம்பா சிங் ஆகியோரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள் ஆயுதங்கள், வெடிமருந்துகள், மொபைல் போன்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களில், மலைப்பகுதி மற்றும் பள்ளத்தாக்கில் மொத்தம் 113 சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →