இந்தியன் வங்கியின் வா்த்தகம் 5% அதிகரிப்பு
முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியின் மொத்த வா்த்தகம் கடந்த மாா்ச் காலாண்டில் 5.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியின் மொத்த வா்த்தகம் கடந்த மாா்ச் காலாண்டில் 5.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2024-25-ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் வங்கியின் மொத்த வா்த்தகம் ரூ.13.25 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய டிசம்பா் காலாண்டைவிட இது 5.1 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் மொத்த வா்த்தகம் ரூ.12.61 லட்சம் கோடியாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியில் மேற்கொள்ளப்பட்டிருந்த வைப்பு நிதி முதலீடு ரூ.7.02 லட்சம் கோடியிலிருந்து 5 சதவீதம் அதிகரித்து ரூ.7.37 லட்சம் கோடியாக உள்ளது; மொத்த கடனளிப்பு ரூ.5.59 லட்சம் கோடியிலிருந்து 5.2 சதவீதம் அதிகரித்து ரூ.5.88 லட்சம் கோடியாக உள்ளது.
Advertisement
Advertisement
2023-24-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ. 2,119 கோடியாக இருந்த வங்கியின் நிகர லாபம் 2024-25-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டில் 35 சதவீதம் அதிகரித்து ரூ.2,852 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.