சிபிஎஸ்இ  
இந்தியா

ஒடிசா: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியீடு!

ஒடிசாவில் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்திய உயர்நிலைப் பள்ளி சான்றிதழ் தேர்வு முடிவுகள் மே இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DIN

கட்டாக்: ஒடிசாவில் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்திய உயர்நிலைப் பள்ளி சான்றிதழ் தேர்வு முடிவுகள் மே இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10 ஆம் வகுப்பு தேர்வுக்கான மதிப்பீட்டு செயல்முறை முடிவடையும் தருவாயில் இருப்பதாக பிஎஸ்இ தலைவர் ஸ்ரீகாந்த் தாராய் இன்று தெரிவித்தார்.

தேர்வு வினாத்தாள் மதிப்பீடு மார்ச் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்ற நிலையில், இந்த செயல்முறை மூன்று நாட்களுக்கு நிறுத்தப்பட்டதால், தேர்வு முடிவுகள் மே மாதம் 2-வது வாரம் வெளியிடப்படுவதை உறுதி செய்ய நாங்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறோம்.

அதே வேளயைில், மாணவர்கள் குறிப்பாக உயர் கல்வி நிறுவனங்களில் சேர விரும்புவோரின் கல்வி நலன்களுக்கு வாரியம் முன்னுரிமை அளிக்கிறது.

அறிவியல் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் எந்தவித கவலை கொள்ள தேவையில்லை. தேர்வுக்குழுவின் பரிந்துரைகளுக்கு இணங்க அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.

அறிவியல் விணாத் தாளில் அச்சுப் பிழைகள் இருந்ததாக தெரிவித்த அவர், இந்த ஆண்டு தேர்வில் வாட்டர்மார்க் மற்றும் கியூஆர் குறியீடு தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதையும் எடுத்துரைத்தார்.

இந்த ஆண்டு, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 5.5 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை முலம் தேர்வு பாதுகாப்பை கணிசமாக வலுப்படுத்தியுள்ள நிலையில், வினாத்தாள் கசிவு பிரச்சினையை கட்டுப்படுத்தியுள்ளது என்றார்.

இதையும் படிக்க: மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,089 புள்ளிகளுடனும், நிஃப்டி 374 புள்ளிகளுடன் நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT