ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மும்பையில் இந்திய ரிசர்வ் வங்கி 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதி கொள்கை கூட்டம் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் நிதி கொள்கை முடிவை ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்தார்.
ரிசர்வ் வங்கி, நிதியாண்டு 2026 -க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை முந்தைய மதிப்பீட்டான 6.7 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகக் குறைத்துள்ளது. அதிபர் டிரம்ப் சீனா மீது விதித்துள்ள 104 சதவிகித வரிவிதிப்பு ஆகியவை உலக வர்த்தகத்தில் பொருளாதார நிச்சமற்றத் தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கினார்.
இந்தியாவில் பணவீக்கம் குறைந்து பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதால், ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான நிதி கொள்கை ஆணையம், ரெப்போ விகிதத்தைக் குறைப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கடைசி கொள்கை கூட்டத்தில், 5 ஆண்டுகளுக்குப் பின்னர் ரெப்போ விகிதத்தை 6.5 சதவிகிதத்திலிருந்து 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்திருந்தனர். மேலும், 2 மாத இடைவெளியில் மீண்டும் 0.25 சதவிகிதம் குறைப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
பயன் பெறப் போவது யார்?
ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், வங்கிகள் மக்களுக்கு அளிக்கும் கடன்கள் மீதான வட்டி விகிதம் குறையும். ஏற்கனவே கடன் பெற்று இஎம்ஐ செலுத்தி வரும் மக்களுக்கு மாதத் தவணை தொகை குறையும். மக்களிடம் சற்று பணம் இருக்கும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: 5 நாள்களுக்குப் பின்.. மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.