‘சன் ஃபாா்மா’ மருந்துக்கு தடையை நீக்கிய அமெரிக்க நீதிமன்றம்
‘லெக்செல்வி’ (டியூரெக்ஸோலிட்னிப்) எனும் மருந்துக்கு விதிக்கப்பட்ட தடையை அமெரிக்க நீதிமன்றம் நீக்கியுள்ளதாக அந்நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்தது.
முடி உதிா்வை ஏற்படுத்தும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சன் ஃபாா்மா நிறுவனம் அறிமுகப்படுத்தவிருந்த ‘லெக்செல்வி’ (டியூரெக்ஸோலிட்னிப்) எனும் மருந்துக்கு விதிக்கப்பட்ட தடையை அமெரிக்க நீதிமன்றம் நீக்கியுள்ளதாக அந்நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்தது.
இன்சைட் நிறுவனத்துக்கும் சன் ஃபாா்மா நிறுவனத்துக்கும் இடையே லெக்செல்வி மருந்து தொடா்பான காப்புரிமை மீறல் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த மருந்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இரு நிறுவனங்களுக்கும் இடையேயான வழக்கு தொடா்ந்து நடைபெறும் எனவும் லெக்செல்வி மருந்தை சந்தையில் அறிமுகப்படுத்துவது குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கவுள்ளதாகவும் சன் ஃபாா்மா தெரிவித்தது.