பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2 பேர் காஷ்மீரில் சுட்டுக்கொலை!
’ஆபரேசன் சத்ரு’ பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை...
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளைக் கண்டறிந்து அழிக்கும் நடவடிக்கை 4-ஆவது நாளாக சனிக்கிழமையும்(ஏப். 12) தொடர்கிறது.
ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் ’ஆபரேசன் சத்ரு’ பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் ஒருபகுதியாக, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக ராணுவம் தரப்பிலிருந்து இன்று(ஏப். 12) தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வெள்ளிக்கிழமை(ஏப். 12) ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்ட நிலையில், மொத்தம் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கிஷ்துவாா் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சத்ரு வனப்பகுதியில் அவா்களை கண்டறிந்து அழிக்கும் நடவடிக்கையில் ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் போலீஸாா் ஈடுபட்டிருப்பதாக’ தெரிவிக்கப்பட்டுள்ளது.