குறைந்த தொகையில் அதிக சலுகைகளை அளித்துவரும் பிஎஸ்என்எல் நிறுவனம், பிரீபெய்ட் ரீசார்ஜ் தொகைக்கான காலக்கெடுவைக் குறைத்துள்ளது.
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பி ரீசார்ஜ் செய்யப்படும், ரூ. 2,399 மற்றும் ரூ. 1,499 ஆகிய இரு தொகைக்கான ரீசார்ஜ் காலக்கெடுவைக் குறைத்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தில், அதிக நாள்கள் பேசுவதற்கான கால அவகாசம் (வேலிடிட்டி) கொடுக்கப்பட்ட இந்த இரு திட்டங்களின் கால அளவு குறைக்கப்பட்டாலும், அவை ஓராண்டுக்கு மேலான கால அளவையே கொண்டுள்ளது.
அதனால், கால அளவு குறைக்கப்பட்டாலும், மக்களால் அதிகம் விரும்பி ரீசார்ஜ் செய்யும் திட்டமாகவே இது நீடிக்கும் என பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
ரூ. 2,399 ரீசார்ஜ் திட்டம்
இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் வரையறையற்ற அழைப்புகள், நாளொன்றுக்கு 100 குறுஞ்செய்திகள் மற்றும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படும்.
இத்திட்டம் 425 நாள்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 395 நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது. நாள்கள் குறைக்கப்பட்டாலும், மற்ற எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வழங்காத வகையில், ஓராண்டுக்குm மேலான நாள்களையே இத்திட்டம் கொண்டுள்ளது.
ரூ. 1,499 ரீசார்ஜ் திட்டம்
இதேபோன்று ரூ. 1,499 ரீசார்ஜ் திட்டமும், வரையறையற்ற அழைப்புகள், நாளொன்றுக்கு 100 குறுஞ்செய்திகள் மற்றும் 2 ஜிபி டேட்டா கொண்டுள்ளது. இதில், 365 நாள்களாக இருந்த வேலிடிட்டி 336 நாள்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 11 மாதங்களாக எந்தவித மாற்றங்களும் செய்யப்படாத இந்த இரு திட்டங்களிலும் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் மாற்றங்களை செய்துள்ளது.
இதையு படிக்க | ஐபிஎல் போட்டியால் ஜியோ ஹாட்ஸ்டார் அடைந்த பலன்!
இதையு படிக்க | இளைஞர்களைக் கவரும் ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர்! ரூ.1.5 லட்சத்துக்குள்.!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.