புது தில்லி: குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் பிணை வழங்கிய உத்தரவை ரத்து செய்திருக்கும் உச்ச நீதிமன்றம், நீதிமன்றத்தையும், உத்தரப் பிரதேச அரசின் மெத்தனப் போக்கு குறித்து கருத்துத் தெரிவித்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பிணை மனுக்கள் மீது நீதிமன்றம் மிக மெத்தனப்போக்குடன் நடந்து கொள்கிறது. இதனால்தான் ஏராளமான குற்றவாளிகள் பிணை பெற்று தலைமறைவாகிவிடுகிறார்கள். இதுபோன்ற குற்றவாளிகள் சமூகத்துக்கு மிகவும் அபாயத்துக்குரியவர்கள். இதுபோன்ற குற்றவாளிகளுக்கு பிணை வழங்கும்போது குறைந்தபட்ச நிபந்தனைகளையாவது விதிக்க வேண்டும். இதுபோன்று பிணை வழங்கும்போது, குற்றவாளிகளை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா மற்றும் மகாதேவன் அமர்வு தெரிவித்துள்ளது.
மேலும், குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், எப்போதும் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளையே குற்றஞ்சொல்லக்கூடாது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.
ஒரு குழந்தை இறந்துவிடுவதைக் காட்டிலும் இதுபோன்ற குழந்தை கடத்தல்காரர்களால் கடத்தப்படும்போது பெற்றோருக்கு ஏற்படும் வலியும் வேதனையும் மிகக் கொடூரமானது என்றும் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.