எந்தவொரு விவகாரத்திலும் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கே இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் மத மோதலை ஊக்குவிக்கிறது என்று கடுமையான சொற்களால் உச்சநீதிமன்றத்தை விமர்சித்துள்ளார் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே.
பாஜக தலைவரது மேற்கண்ட கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் இன்று(ஏப். 19) பேசியிருப்பதாவது: “உச்சநீதிமன்றத்தையோ அல்லது எந்தவொரு நீதிமன்றத்தையோ எதிர்த்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்புவது கவலைக்குரிய விஷயமாகும்.
நமது சட்ட அமைப்பில், இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் அரசின் கையில் இல்லை; உச்சநீதிமன்றத்திடமே அந்த அதிகாரம் இருக்கிறது. இதையொருவர் புரிந்துகொள்ளாமல் பேசுவது வருத்தத்தை தருகிறது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.