இந்தியா

நீட் முதுநிலை தேர்வு: மருத்துவர்கள் கோரிக்கை ஏற்கப்படுமா?

இரு கட்டங்களாக நீட் தேர்வு நடத்த வேண்டாம் - மருத்துவர்கள் கோரிக்கை

DIN

நீட் முதுநிலை தேர்வை இரு கட்டங்களாக நடத்த வேண்டாம் என்று மத்திய அரசிக்கு மருத்துவர்கள் தரப்புக்கு கோரிக்கை வைத்துள்ளது.

நீட் முதுநிலை தேர்வு ஜூன் 15-ஆம் தேதி உள்ளது. இத்தேர்வு காலை 9 - 12.30 மணிவரை, அதனைத்தொடர்ந்து அதே நாளில் மாலை 3.30 - 7 மணிவரை நடைபெற உள்ளது.

இந்தநிலையில், இரு கட்டங்களாக நீட் தேர்வு நடத்த வேண்டாம், ஒரே ஷிப்ட்டில் அனைத்து தேர்வர்களையும் உள்ளடக்கி தேர்வு நடத்த வேண்டுமென மருத்துவர்கள் தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை, அதாவது 2024-இல், இரு ஷிப்ட் முறையில் நீட் முதுநிலை தேர்வு நடத்தப்பட்டதில், முதல் ஷிப்ட்டில் தேர்வு எளிமையாக இருந்ததாகவும், ஆனால், இரண்டாம் ஷிப்ட் சற்று கடினமாக இருந்ததாகவும் தேர்வெழுதிய மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக, இரண்டாம் ஷிப்ட்டில் தேர்வு எழுதியவர்கள் கட்-ஆஃப் மதிப்பெண் குறைவாகப் பெற நேர்ந்ததாகவும் மருத்துவர்கள் தரப்பிலிருந்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இம்முறை நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த வலியுறுத்தி ‘இந்திய மருத்துவ சங்க இளநிலை மருத்துவர்களின் வளையம்(ஐ.எம்.ஏ - ஜே.டி.என்) மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. சுமார் 2 லட்சம் மருத்துவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க அவர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

மருத்துவர்கள் தரப்பு கோரிக்கையை ஏற்று, ஒரே ஷிப்ட்டில் நீட் முதுநிலை தேர்வு நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு இளம்நிலை மருத்துவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிடிஇஏ பள்ளிகளில் பயிலும் வடஇந்திய மாணவா்களுக்கு தமிழ்ப் போட்டிகள்

விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் தா்னா

அன்னையின் மகா சமாதி தினம்: அரவிந்தா் ஆசிரமத்தில் கூட்டுத் தியானம்

பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் Q2 லாபம் 21% உயர்வு!

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 474 மனுக்கள் அளிப்பு

SCROLL FOR NEXT