முதலிடம் பெற்ற தேர்வர் சக்தி துபே. 
இந்தியா

யுபிஎஸ்சி இறுதித் தேர்வு முடிவு வெளியீடு: உ.பி. மாணவி முதலிடம்

2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

DIN

மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வின் இறுதி நிலையான நேர்முகத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.

இதில் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த மாணவி சக்தி துபே முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். அலாகாபாத் பல்கலைக்கழக இளநிலை உயிரி வேதியியல் (பி.எஸ்சி.) பட்டதாரியான இவர், யுபிஎஸ்சி தேர்வில் அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் பாடத்தை விருப்பப் பாடமாக தேர்ந்தெடுத்திருந்தார்.

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த ஹர்ஷிதா கோயல் இரண்டாம் இடம் பிடித்தார். பரோடா எம்.எஸ். பல்கலைக்கழகத்திலிருந்து இளநிலை வணிகவியல் (பி.காம்.) பட்டம் பெற்ற இவரும், யுபிஎஸ்சி தேர்வில் அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் பாடத்தை தனது விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்திருந்தார்.

வேலூர் விஐடி நிறுவனத்தில் பி.டெக். மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் பட்டம் பெற்ற மகாராஷ்டிர மாநிலம் புணேயைச் சேர்ந்த டோங்ரே அர்ச்சித் பராக், மூன்றாமிடம் பிடித்தார். இவர் தத்துவயியலை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்திருந்தார்.

குஜராத் மாநிலம், அகமதாபாதில் உள்ள குஜராத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பி.இ. கணினி அறிவியல் பட்டம் பெற்ற ஷா மார்கி சிராக், அகில இந்திய அளவில் நான்காம் இடம் பிடித்தார். இவர் சமூகவியலை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்திருந்தார்.

தில்லியின் குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தில் பி.டெக். கணினி அறிவியல் பட்டம் பெற்ற ஆகாஷ் கர்க், ஐந்தாமிடம் பிடித்தார். இவரும் சமூகவியலை விருப்பப் பாடமாக எடுத்திருந்தார்.

முதலிடம் பிடித்த ஐவரில் மூவர் பெண்கள், இருவர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யுபிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப் பணி), ஐபிஎஸ் (இந்திய காவல் பணி), ஐஎஃப்எஸ் (இந்திய வெளியுறவுப் பணி) உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வு, முதல்நிலை (பிரிலிமினரி), முதன்மை (மெயின்) தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது.

2024-ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற 5,83,213 பேரில், 14,627 பேர் முதன்மைத் தேர்வெழுத தகுதி பெற்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 2,845 பேர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர்.

இறுதித் தேர்வு: நேர்முகத் தேர்வு கடந்த ஜனவரி 7-ஆம் தேதிமுதல் ஏப்ரல் 17-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இதில், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகளில் பணியமர்த்த 725 ஆண்கள், 284 பெண்கள் உள்பட 1,009 பேரை யுபிஎஸ்சி பரிந்துரை செய்துள்ளது. நேர்முகத் தேர்வு முடிவுகளை ஜ்ஜ்ஜ்.ன்ல்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற வலைதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

இறுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 335 பேர் பொதுப் பிரிவையும், 318 பேர் பிற்படுத்தப்பட்ட பிரிவையும், 160 பேர் எஸ்.சி. பிரிவையும், 109 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவையும் (இடபிள்யுஎஸ்), 87 பேர் எஸ்.டி. பிரிவையும் சேர்ந்தவர்களாவர்.

இதில் முதல் 25 இடங்களைப் பிடித்தவர்களில் 14 பேர் ஆண்கள், 11 பேர் பெண்கள்.

நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்களில் ஒருவரின் தேர்வு முடிவை மட்டும் நிறுத்திவைத்திருப்பதாக யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வர்களுக்கான உதவி மையம் புது தில்லி யுபிஎஸ்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களின் தேர்வு குறித்த சந்தேகங்களை இந்த மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் வந்து நிவர்த்தி செய்துகொள்ளலாம். அல்லது, 011- 23385271, 23381125, 23098543 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம்.

நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் 15 நாள்களுக்குள் யுபிஎஸ்சி வலைதளத்தில் வெளியிடப்படும் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் Gaming திருவிழா! | Chennai Trade Center | Gamer's Hub | BGMI | PUBG | FIFA | REDBULL

ரயிலில் தவறவிட்ட 50 பவுன் தங்க நகைகள்: பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே போலீஸ்!

பிகார் வரைவு வாக்காளர் பட்டியலில் 67,800 போலி வாக்காளர்கள்? -தேர்தல் ஆணையம் மறுப்பு

சூர்யாவுக்கு ஜோடியாகும் நஸ்ரியா?

டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!

SCROLL FOR NEXT