சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள்.. 
இந்தியா

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாரமுல்லாவின் உரியில் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.

DIN

ஜம்மு- காஷ்மீரின் பாரமுல்லாவின் உரி நாலாவில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

இதற்கு அடுத்த நாளான புதன்கிழமை காலை இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இரண்டு பேரை சுட்டுக் கொன்றதாக இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாரமுல்லாவில் நடந்து வரும் அதிரடி நடவடிக்கையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது” எனப் பதிவிட்டுள்ளது.  

மேலும், பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துப் பொருள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருவதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேவுக்கு இமாலய இலக்கு!

ரூ. 2,000 கோடி முதலீடு செய்த ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்!

மேற்கு வங்கம்: விடுதி அறையில் இருந்து மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்பு

வெறுப்புணர்வுக் கருத்து: அஸ்ஸாம் முதல்வருக்கு குவாஹாட்டி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

காங்கிரஸுடன் கூட்டணி? நல்லதே நடக்கும்: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT