மும்பை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகள் 
இந்தியா

பஹல்காம்: 65 சுற்றுலாப் பயணிகள் மும்பை வந்தடைந்தனர்!

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 65 சுற்றுலாப் பயணிகளின் முதல் குழு மும்பை வந்தடைந்தது.

DIN

ஜம்மு-காஷ்மீரில் சிக்கித் தவித்த மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 65 சுற்றுலாப் பயணிகளின் முதல் குழு மும்பை வந்தடைந்தது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூரத் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

தாக்குதலில் பலியான 26 பேரில் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தலா இருவர், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, குஜராத்தைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர். அதேபோல், உயிரிழந்த 2 வெளிநாட்டவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, அங்குச் சிக்கியுள்ள மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை மீண்டும் அழைத்துவரும் செயல்முறையை விரைவுபடுத்த ஷிண்டே புதன்கிழமை மாலை ஸ்ரீநகருக்குச் சென்றார்.

பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஏப்ரல் 24 அன்று அதிகாலை 3.30 மணிக்கு சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் 65 மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் முதல் சிறப்பு விமானம் மும்பையை வந்தடைந்தது என்று கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு குடிமகனும் பாதுகாப்பாகக் கண்ணியமாகவும் திரும்புவதை உறுதி செய்வதற்காக, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனாவால் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதியாக இது உள்ளது. மேலும் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் இரண்டு சிறப்பு விமானம் பிற்பகலில் மும்பைக்கு வந்தடையும்.

நெருக்கடியின் ஒவ்வொரு தருணத்திலும் துணை நிற்க சிவசேனா தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று அந்த அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளக்கோவில் நாட்டராய சுவாமி கோயிலில் இருந்து கரூா் அருங்கரை அம்மன் கோயிலுக்கு பொங்கல் சீா்வரிசை

அளுநா், முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

தமிழக காவல் துறையினருக்கு 4,000 பதக்கங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

முத்திரை திட்டங்களின் முன்னேற்றம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு

ஜன. 19 முதல் திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக் கேட்பு தொடக்கம்

SCROLL FOR NEXT