PTI
இந்தியா

இந்தியாவுடன் போர்? சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்திய பாகிஸ்தான்!

சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் நிறுத்தி வைத்தது.

DIN

சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த நிலையில், பதில் நடவடிக்கையாக சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.

சிம்லா நதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்த பாகிஸ்தான், இதனைப் போராகக் கருதுவதாகத் தெரிவித்துள்ளது.

1971 ஆம் ஆண்டில் ஏற்பட்ட போரை நிறுத்தும்வகையில், 1972-ல் சிம்லா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

சிம்லா ஒப்பந்தத்தின்படி, முக்கிய அம்சங்களாக, இருநாடுகளும் தங்கள் நாட்டுப் போர்க்கைதிகளை அமைதியான முறையில் விடுவிக்க வேண்டும். இரு நாடுகளின் எல்லைகளை அமைதியான முறையில், பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்க வேண்டும்; எல்லைப் பிரச்னைகளையும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்.

பெஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசாக்களை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. தொடர்ந்து, இந்தியாவிலுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த பாதுகாப்பு, ராணுவம், விமானம், கடற்படை ஆலோசகர்கள் ஒருவாரத்துக்குள் வெளியேற உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, இந்தியா மீது பாகிஸ்தானும் சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்தத் தடை, இந்தியாவுடன் அனைத்து வகை வர்த்தங்களும் நிறுத்தம் முதலான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் பேரணியில் பிரதமர் மோடியின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: பாஜக போராட்டம்!

பேபி... ரெஜினா கேசண்ட்ரா!

வெண்மேகம்... காஜல் அகர்வால்!

சென்னையில் அதிகனமழை: ஜெர்மனியிலிருந்து மழை பாதிப்பு குறித்து தொலைபேசியில் கேட்டறிந்த முதல்வர்!

கார், அடமானக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்தது பரோடா வங்கி

SCROLL FOR NEXT