சிக்கிம் நிலச்சரிவு.. 
இந்தியா

சிக்கிம் நிலச்சரிவு: 1000 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு!

சிக்கிம் நிலச்சரிவு: 1000 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

DIN

சிக்கிமின் லாச்சென் மற்றும் லாச்சுங் பகுதியில் நேரிட்ட நிலச்சரிவில் 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணி சிக்கித் தவித்து வருவதாகவும், முதற்கட்டமாக அங்கு வசிக்கும் 1500 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு சிக்கிமில் உள்ள இரண்டு உயரமான மலைப் பகுதியான லாச்சென் மற்றும் லாச்சுங்கில் சுமார் 1,000 சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை முதல் நிலச்சரிவுகள் காரணமாக தொடர்ந்து சிக்கித் தவிப்பதாக மாவட்ட மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

நிலச்சரிவு காரணமாக சாலையில் சிக்கித் தவித்த சுமார் 1,500 சுற்றுலாப் பயணிகள் நேற்றிரவு அருகிலுள்ள கிராமங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அவர்கள் காவல் நிலையம், குருத்வாரா, இந்தோ - திபெத்திய எல்லை காவல் முகாம் போன்ற இடங்களில் இரவைக் கழித்த நிலையில் அவர்களுக்கு அங்குள்ள கிராமவாசிகள் உணவளித்தனர்.

நேற்றி இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள், சுங்தாங்கிலிருந்து லாச்சென் செல்லும் வழியில் முன்ஷிதாங்கிற்கு அருகிலும், சுங்தாங்கிலிருந்து லாச்சுங்கிற்கு செல்லும் வழியில் லிமாவிற்கு அருகிலும் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளது.

இதனால், பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: தமிழ்நாட்டின் 10 இடங்களில் வெயில் சதம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT