சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!
சிக்கிமில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் பதிவானது குறித்து...
சிக்கிம் மாநிலத்தில், அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருப்பது பதிவாகியுள்ளது.
சிக்கிமின் கியால்ஷிங் மாவட்டத்தில், வியாழக்கிழமை (பிப். 26) பிற்பகல் 11.24 மணியளவில் 10 கி.மீ. ஆழத்தில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக, தேசிய நிலஅதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மதியம் 12.17 மணியளவில் தலைநகர் கேங்டாகிலிருந்து 11 கி.மீ. வடமேற்கில் 10 கி.மீ. ஆழத்தில் 3.5 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது பதிவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த இரண்டு நிலநடுக்கங்களிலும் பெரியளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால் உள்ளூர்வாசிகள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
முன்னதாக, ஆழம் குறைந்த நிலநடுக்கங்கள் மிகவும் ஆபத்தானவை எனக் கருதப்படும் நிலையில், இன்று ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்களால் பின்அதிர்வுகள் உருவாகக் கூடும் என அஞ்சப்படுவது குறிப்பிடத்தக்கது.
Two earthquakes have been reported in the state of Sikkim.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.