ராணுவத் தலைமை தளபதி உபேந்திர துவிவேதி (கோப்புப்படம்) ANI
இந்தியா

போர்ப் பதற்றம்: ஸ்ரீநகரில் ராணுவத் தளபதி முக்கிய ஆலோசனை!

ஸ்ரீநகரில் ராணுவத் தளபதி ஆய்வு செய்வது பற்றி...

DIN

இந்திய எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ராணுவத் தலைமை தளபதி உபேந்திர துவிவேதி ஸ்ரீநகருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் அவர், ராணுவ அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு என அதிரடி அறிவிப்புகளுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தானும் சிம்லா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.

மேலும், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை போராகவே கருதுவதாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்துள்ளனர்.

போர்ப் பதற்றத்துக்கு மத்தியில், ஸ்ரீநகர் மற்றும் உதம்பூரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக ராணுவத் தளபதி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுப்பது தொடர்பாக ராணுவ அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

கென்ய முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி செலுத்த வீதிகளில் திரண்ட மக்கள்! புகைக்குண்டு வீசிய போலீஸ்!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்!

டீசல், டியூட், பைசன் - ஒப்பீடு வேண்டாம்! சிலம்பரசன் வேண்டுகோள்

நடிகர் ரஜினிகாந்த்துடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு!

SCROLL FOR NEXT