கோப்புப் படம் 
இந்தியா

பாட்னா நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

பிகாரில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைப் பற்றி...

DIN

பிகார் மாநிலம் பாட்னா மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகார் மாநில தலைநகர் பாட்னாவிலுள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று (ஏப்.25) அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைப்பட்டு அந்த நீதிமன்ற வளாகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்தச் சோதனையின் முடிவில், நீதிமன்ற வளாகத்தில் எந்தவொரு சந்தேகப்படும்படியான பொருளும் கிடைக்காததினால், இந்த மிரட்டல் போலியானது என உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து, காவல் துறை உயர் அதிகாரி தீக்‌ஷா கூறுகையில், பாட்னா சிவில் நீதிமன்றத்தினுள் நீதிபதியின் இருக்கைக்கு மிக அருகில் ஆர்.டி.எக்ஸ். எனும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலமாக மர்ம நபரின் மிரட்டல் போலியானது என கண்டறியப்பட்டு, அந்த மர்ம நபரைப் பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அட்டாரி - வாகா எல்லை மூடல்: இரு நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் உறவுகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு: தேர்தல் ஆணையம்

தீபாவளிக்கு 20,378 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பலே ரோஜா... மாளவிகா மோகனன்!

பிக் பாஸ் போட்டியாளர் எஃப்.ஜே.வுக்கும் ஹிப்ஹாப் ஆதிக்கும் என்ன தொடர்பு?

'இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது' - முதல்வர் மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT