கோப்புப் படம் 
இந்தியா

உத்தரகண்டில் ராணுவ சீருடை விற்பனைக்குத் தடை!

உத்தரகண்டில் ராணுவ சீருடையின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

உத்தரகண்ட் மாநிலத்தில் இந்திய ராணுவத்தின் சீருடைகள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தினரின் சீருடை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், உத்தரகண்டில் பாதுகாப்பு காரணங்களினால் அங்குள்ள சந்தைகளில் இந்திய ராணுவத்தினரின் சீருடைகள் விற்கத் தற்காலிகமாக அம்மாநில காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ராணுவம், துணை ராணுவம் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புப் படையினரின் சீருடைகளை விற்கும் கடைகள் அடையாளம் காணப்பட்டு அதன் விற்பனைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், காவல் துறையினரின் உத்தரவுக்கு முன்னரே தாங்கள் உரிய ஆவணங்களின்றி யாருக்கும் சீருடைகள் விற்பனை செய்வதில்லை என அம்மாநிலத்தில் கடை நடத்தி வரும் சீருடை விற்பனையாளர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 'சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்களின் ரத்தம் ஓடும்' - பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT