முகப்பு
இந்தியா

காஷ்மீரில் குண்டுவெடிப்பில் தகர்க்கப்பட்ட பயங்கரவாதிகளின் வீடுகள்: விடியோ வெளியீடு!

காஷ்மீரில் குண்டுவெடிப்பில் தகர்க்கப்பட்ட பயங்கரவாதிகள் வீடுகளின் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 26 ஏப்ரல், 2025 at 12:22 PM
லஷ்கா் பயங்கரவாதி ஆதில் டோக்கரின் வீடு.
பகிர்:

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஐந்து பயங்கரவாதிகளின் வீடுகள் வெடிகுண்டுகள் மூலம் தகர்க்கப்பட்டுள்ளன. அந்த வீடுகளின் விடியோக்களும் வெளியிடப்பட்டுள்ளன.

முன்னதாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இருவரின் வீடுகளில் பாதுகாப்புப் படையினா் சோதனை மேற்கொண்டபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறி மிகப்பெரிய அளவில் தீப்பிழம்புகள் நேரிட்ட நிலையில், 2 வீடுகளும் தகா்ந்தன; அதேநேரம், யாரும் காயம் அடையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

கடந்த செவ்வாய்க்கிழமை, மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு வெளிநாட்டவர் உள்பட 26 போ் கொல்லப்பட்டனா். இத்தாக்குதலில் ஈடுபட்டதாக ஆதில் ஹுசைன் டோக்கா், சதித் திட்டம் தீட்டியதாக ஆசிஃப் ஷேக் ஆகிய இரு லஷ்கா் பயங்கரவாதிகள் சந்தேகிக்கப்படுகின்றனா்.

பல்வேறு கட்ட சோதனைகளைக் கடந்துதான் இப்பகுதிக்குள் நுழைய முடியும் என்பதால், பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் இங்கே எப்படி நுழைந்தார்கள் என்பதும், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தளத்தில் பாதுகாப்புப் படையினர் இல்லாதது குறித்தும் எதிர்க்கட்சிகளும், மக்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பிஜ்பெஹாரா, திரால் ஆகிய பகுதிகளில் உள்ள இவ்விருவரின் வீடுகளில் வியாழக்கிழமை இரவில் பாதுகாப்புப் படையினா் அதிரடி சோதனை மேற்கொண்டனா். அப்போது, வீடுகளில் வெடிகுண்டுகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வீட்டில் இருந்தவா்களையும், அண்டை வீட்டினரையும் பாதுகாப்புப் படையினா் பாதுகாப்பாக வெளியேற்றினா்.

அப்போது, வெடிகுண்டுகள் வெடித்ததில் வீடுகள் தகா்ந்ததாகவும், யாரும் காயமடையவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தநிலையில், லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி ஷாஹித் அஹமது குட்டாய் வீடு சோட்டிபோராவில் இருந்த நிலையில், அதனை, ரிமோட் மூலம் இயங்கும் வெடிகுண்டுகளைக் கொண்டு அதிகாரிகள் தகர்த்துள்ளனர். ஷாஹித் கடந்த 3 - 4 ஆண்டுகளாக பயங்கரவாத நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளதும், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் பட்டியலில் இவரது பெயரும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

வெடிகுண்டு வெடித்து, வீடுகள் தகர்ந்த நிலையில், அந்த வீடுகளின் விடியோக்கள் வெளியாகியிருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.