கோப்புப் படம் 
இந்தியா

பைக் - வேன் மோதல்; 11 பேர் பலி

பைக் மீது வேன் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்ததால் பயணிகள் பலி

DIN

மத்தியப் பிரதேசத்தில் பைக் மீது வேன் மோதியதில், கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்ததால் பயணிகள் பலியாகினர்.

மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்சௌர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையில் 13 பயணிகளுடன் சென்ற வேன் ஒன்று, பைக் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. மேலும், பைக் மீது மோதிய வேன், கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த கிணற்றுக்குள் விழுந்தது.

வேன் மோதியதில் பைக்கில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அதுமட்டுமின்றி, தண்ணீர் இருந்த கிணற்றுக்குள் விழுந்ததால், வேனில் பயணித்தவர்களில் 9 பேரும், அவர்களைக் காப்பாற்றச் சென்ற அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரும் பலியாகினர்.

அதிருஷ்டவசமாக வேனில் பயணித்தவர்களில் 4 பேர் காப்பாற்றப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினரும் மீட்புப் படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தசரா வாழ்த்துகள்... ஐஸ்வர்யா ராஜேஷ்!

வண்ண நிலவே... ஸ்மிருதி காஷ்யப்!

தும்பை பூ... நிகிலா விமல்!

கரூர் சம்பவம் தமிழகத்தின் தலைக்குனிவு; அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்! - இபிஎஸ்

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: மேலாளர், விழா ஏற்பாட்டாளர் மீது கொலை வழக்கு!

SCROLL FOR NEXT