கோப்புப் படம் 
இந்தியா

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் பறிமுதல் செய்தனர்.

DIN

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மணிப்பூரில் ரோந்துப் பணியின்போது மூன்று மாவட்டங்களில் இருந்து கங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி (கே.சி.பி.) ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி ஆகிய இரு அமைப்புகளைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இம்பால் கிழக்கு மாவட்டத்தில் 8 பேரும், இம்பால் மேற்கில் மூவரும், காக்சிங் மாவட்டத்தில் ஒருவரும் என 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சில ஆயுதங்களும் வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஆதார் அட்டை, இரண்டு இரு சக்கர வாகனங்கள், 15 செல்போன்களும் சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள், கங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி, ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கெனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமூகவலைதளங்களில் பகிரப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், பகிரப்பட்டுவரும் விடியோக்களின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ளும்படியும் காவல் துறை வேண்டுகோள் வைத்துள்ளது.

இதையும் படிக்க | பிரச்னைகளைவிட பிரசாரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பாஜக: சமாஜவாதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

SCROLL FOR NEXT