படம் | சீன வெளியுறவு விவகார அமைச்சகம்
இந்தியா

பஹல்காம் தாக்குதல்: சீனா யார் பக்கம்?

பஹல்காம் விவகாரம் குறித்து சீனா: பாக். - இந்தியா பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தல்

DIN

பஹல்காம் தாக்குதல் குறித்து விரைவான விசாரணை மேற்கொள்ள சீனா வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இரு நாடுகளிலும் அமைதி திரும்ப தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதை சீனா வரவேற்கிறது என்று சீன வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் அங்கு சுற்றுலாவுக்குச் சென்றிருந்த 26 பேர் கொல்லப்பட்டனர். இதன் எதிரொலியாக, பாகிஸ்தானுடனான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருப்பதுடன் இருநாட்டு எல்லையில் போர்ப் பதற்றமும் அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்- ஏ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ பொறுப்பேற்றது.

இந்த நிலையில், பஹல்காம் விவகாரம் குறித்து சீனா தரப்பில் இன்று(ஏப். 28) வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறியிருப்பதாவது: இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் அண்டை நாடாக திகழும் சீனா, மேற்கண்ட இரு நாடுகளும் இணைந்து ஒரே திசையில் வேறுபாடுகளைக் களைந்து பேச்சுவார்த்தை வழியாக தீர்வு காண முயல வேண்டுமென்பதையே விரும்புகிறது. இதன்மூலம், அப்பகுதியில் அமைதியையும் நிலைத்தன்மையையும் நிலைநாட்ட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!

அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்க வேண்டும்: கேஜரிவால்

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

SCROLL FOR NEXT