இந்தியா

பெங்களூரு: மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக ஒரே வாரத்தில் 650க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

பெங்களூருவில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக ஒரே வாரத்தில் 650க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

DIN

பெங்களூருவில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக ஒரே வாரத்தில் 650க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடந்த ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 27 வரை போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு இடங்களில் சிறப்பு வாகனச் சோதனை நடைபெற்றது.

53 போக்குவரத்து காவல் நிலையங்களைச் சேர்ந்த போக்குவரத்து அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மொத்தம் 43, 253 வாகனங்கள் சோதனைச் செய்யப்பட்டு மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 668 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த சோதனையின்போது அதிவேகத்தில் வாகனம் ஓட்டியவர்கள் மீதும் 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.1.89 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூரு நகரில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் போன்ற அச்சுறுத்தல்களைத் தடுப்பதே இந்த சோதனையின் நோக்கமாகும்.

இது மேலும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூன்வாக் - மினி கேசட் விடியோ!

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

குடிநீா் மேல்நிலைத் தொட்டிகளில் மீட்டா் பொருத்த பாஜக கோரிக்கை

நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கயம், வெள்ளக்கோவிலில் ஆா்ப்பாட்டம்

நேரடி வரி வசூல் 8% அதிகரித்து ரூ.17.04 லட்சம் கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT