உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்) 
இந்தியா

ஆபாசப் படங்கள்: ஓடிடி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

ஓடிடி நிறுவனங்கள், முகநூல், எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது பற்றி...

DIN

ஆபாசப் படங்கள், இணையத் தொடர்களை ஓடிடியில் வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் ஓடிடி நிறுவனங்கள், மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓடிடி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் ஆபாச திரைப்படங்கள், இணையத் தொடர்கள், விடியோக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி கவாய் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சமூக ஊடகங்களில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் ஆபாச விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும், அதுதொடர்பான முழுப் பட்டியலும் இணைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”இதுபோன்ற காட்சிகளால் குழந்தைகள் பாதிக்கப்படுவது கவலை அளிக்கிறது. இதனைத் தடுக்க சில விதிமுறைகள் நடைமுறையில் இருக்கின்றது. மேலும் சில பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது” என்றார்.

இதனைத் தொடர்ந்து, அமேசான் ப்ரைன், நெட்ஃபிளிக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி நிறுவனங்களுக்கும், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கும் மத்திய அரசுக்கும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

சிஎஸ்கேவில் இணைந்த ராகுல் சஹார்!

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி - உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!

தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT