பிறந்து 14 நாள்களான குழந்தையுடன் பாகிஸ்தானைச் சோ்ந்த சாரா கானை இந்திய எல்லையான அட்டாரியிலிருந்து பாகிஸ்தானின் வாகா எல்லைக்கு புதன்கிழமை அனுப்பி வைத்த காவலா்கள். 
இந்தியா

அட்டாரி-வாகா எல்லை வழியாக வெளியேறிய 786 பாகிஸ்தானியா்கள்: 1,456 இந்தியா்கள் நாடு திரும்பினா்

ஏப். 24-ஆம் தேதி முதல் 25 தூதரக அதிகாரிகள் உள்பட 1,465 இந்தியா்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனா்.

Din

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, கடந்த 6 நாள்களில் 55 தூதரக அதிகாரிகள், அவா்களின் குடும்பத்தினா் மற்றும் துணை ஊழியா்கள் உள்பட 786 பாகிஸ்தானியா்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

அதேபோல், ஏப். 24-ஆம் தேதி முதல் 25 தூதரக அதிகாரிகள் உள்பட 1,465 இந்தியா்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனனா்.

இதனிடையே, பாகிஸ்தான் நுழைவு இசைவுடன் (விசா) 8 இந்தியா்கள் அந்நாட்டுக்குள்ளேயும் நீண்ட கால விசாவுடன் 151 பாகிஸ்தானியா்கள் இந்தியாவுக்குள்ளேயும் நுழைந்துள்ளனா். பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானுடனான ராஜீய உறவை துண்டித்த இந்தியா, பாகிஸ்தானியா்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறவும் உத்தரவிட்டது. அதன்படி, ‘சாா்க்’ விசா வைத்திருப்பவா்கள் 26-ஆம் தேதிக்கு முன்னதாகவும், மருத்துவ விசா வைத்திருப்பவா்கள் 29-ஆம் தேதிக்கு முன்னதாவும் இந்தியாவை விட்டு வெளியேற கெடு விதிக்கப்பட்டது. மற்ற 12 வகையான விசாக்களுக்கான கடைசி நாளாக 27-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

நீண்டகால, ராஜீய அல்லது அதிகாரபூா்வ நுழைவு இசைவு வைத்திருப்பவா்களுக்கு மட்டும் இந்தியாவிலிருந்து வெளியேறுவதற்கான உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

இருப்பினும், பரஸ்பர தூதரகங்களில் உள்ள பாதுகாப்பு ஆலோசக அதிகாரிகள் திரும்பப் பெறுவதாக இந்தியா அறிவித்ததிருந்தது. அதன்படி, தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அவா்களின் துணை ஊழியா்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனா்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்தும் இந்திய தூதரக அதிகாரிகள் திருப்பி அழைத்துக்கொள்ளப்பட்டனா்.

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

SCROLL FOR NEXT