கோப்புப் பட,ம் 
இந்தியா

பாகிஸ்தான்: குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலி!

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலியானதைப் பற்றி...

DIN

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

கைபர் பக்துன்குவாவிலுள்ள தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அஸ்ஸாம் வர்ஸாக் சோதனைச் சாவடிக்கு அருகில் இன்று (ஏப்.30) ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 3 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர்.

மேலும், ஒரு குழந்தை உயிருக்கு ஆபத்தான சூழலில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்நாட்டு காவல் துறையினர் கூறுகையில், அந்தக் குழந்தைகள் அங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் அப்பகுதியைக் கடந்ததால் இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளதாகக் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க:ராஜஸ்தானில் 3 நாள்களில் கள்ளச்சாராயத்துக்கு 8 பேர் பலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

நெல்லையில் செப். 7 வாக்குத் திருட்டு விளக்க மாநாடு! பிரியங்கா பங்கேற்பு?

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

ஐபிஎல்லில் இருந்து அஸ்வின் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை மீண்டும் ரூ. 75 ஆயிரத்தை கடந்தது!

SCROLL FOR NEXT