ஆந்திர முதல்வர் சந்திரபாபு அரசு நிகழ்வு ஒன்றில் பங்கேற்க ஆட்டோவில் சென்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
ஆந்திர மாநிலம், கடப்பாவில் அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பங்கேற்க ஹெலிகாப்டரில் வந்திறங்கிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பின்னர் ஹெலிபேடு தளத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஆட்டோவில் சென்றார்.
ஆட்டோவில் பின்புற இருக்கையில் அமர்ந்து பயணித்த அவர், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடைந்ததும் ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
தொடர்ந்து ஆட்டோவுக்கான பயணக் கட்டணத்தை கொடுத்த சந்திரபாபு நாயுடு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு ஆட்டோவில் வந்திறங்கியது நிகழ்ச்சியில் பங்கேற்றோர் மத்தியில் கவனம் பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.