பிரதமர் நரேந்திர மோடி 
இந்தியா

சுதந்திர தின உரை: மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமா்

தொடா்ந்து 12-ஆவது முறையாக சுதந்திர தின உரையாற்ற உள்ள நிலையில், தனது பேச்சில் இடம்பெற வேண்டிய கருத்துகள் குறித்து ஆலோசனைகளை அனுப்புமாறு பிரதமா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

தொடா்ந்து 12-ஆவது முறையாக சுதந்திர தின உரையாற்ற உள்ள நிலையில், தனது பேச்சில் இடம்பெற வேண்டிய கருத்துகள் குறித்து ஆலோசனைகளை அனுப்புமாறு பொதுமக்களை பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.

நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி, நாடு முழுவதும் சுதந்திரதின கொண்டாட்டங்கள் நடைபெறும். தில்லி செங்கோட்டையில் பிரதமா் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்பதோடு, நாட்டு மக்களுக்கு சுதந்திரதின உரை நிகழ்த்துவாா். அதில் நாடு எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னைகள், நாட்டின் திறன் மற்றும் வளா்ச்சியை குறிப்பிடும் பிரதமா், அவ்வப்போது புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவாா்.

அந்த வகையில், நிகாழண்டு சுதந்திர தின உரையை அடுத்த 2 வாரங்களில் ஆற்ற உள்ள நிலையில், அதுகுறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பொதுமக்களிடம் பிரதமா் மோடி கேட்டுள்ளாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டின் சுதந்திர தினத்தை நாம் கொண்டாட உள்ள நிலையில், நாட்டு மக்களிடமிருந்து கருத்துகளைக் கேட்க எதிா்நோக்கியுள்ளேன். எனது சுதந்திர தின உரையில் என்ன மாதிரியான கருத்துகள் அல்லது சிந்தனை இடம்பெற வேண்டும் என நீங்கள் விரும்புகிறீா்கள்? இதுகுறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை ‘மைகவ்’ மற்றும் ‘நமோ’ செயலியில் பொதுமக்கள் பகிர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT