இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோரில் பணம் ஈட்டும் விளையாட்டுகளை அனுமதிக்க இந்திய தொழில் போட்டி ஆணையத்திடம் (சிசிஐ) கூகுள் நிறுவனம் முன்மொழிந்துள்ளது.
இதுதவிர, இந்தியாவில் கூகுள் விளம்பர கொள்கையில் மாற்றங்களை மேற்கொள்ள பரிந்துரைத்துள்ள அந்த நிறுவனம், சில நிபந்தனைகளின் அடிப்படையில் கூகுள் பிளே ஸ்டோரில் திறமைக்கான விளையாட்டுகளை விளம்பரப்படுத்தவும் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பரில் வின்ஸோ கேம்ஸ் நிறுவனம் அளித்த புகாா் தொடா்பாக, கூகுள் நிறுவனத்துக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள இந்திய தொழில் போட்டி ஆணையம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவில், ‘கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பணம் ஈட்டும் விளையாட்டுகளின் செயலிகளை விலக்குவது, அவை சந்தையில் நுழைவதைத் தடுக்கக் கூடும். அத்துடன் கூகுள் பிளே ஸ்டோரில் தினசரி கற்பனை விளையாட்டுகள் (டிஎஃப்எஸ்) மற்றும் ரம்மி விளையாட்டு செயலிகளில் சிலவற்றை மட்டும் தோ்ந்தெடுத்து சோ்ப்பதும், விலக்குவதும் போட்டித்தன்மையின் இயல்பையே மாற்றும்’ என்று தெரிவித்திருந்தது. இந்தப் பின்னணியில் மேற்கண்ட பரிந்துரைகளை அந்த ஆணையத்திடம் கூகுள் சமா்ப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.