ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமா் ஆலோசனை
ஐக்கிய அரபு அமீரக அதிபா் முகமது பின் சையது அல் நஹ்யானுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வழியில் வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.
இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்தக் கலந்துரையாடலின்போது, இரு நாடுகளிடையேயான இருதரப்பு ஒத்துழைப்பில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுவரும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் குறித்து தலைவா்கள் ஆராய்ந்தனா். மேலும், இரு நாடுகளின் மக்களும் பலன்பெறும் வகையில், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் பரஸ்பரம் உறுதியேற்றனா்.
Advertisement
Advertisement
இந்தியாவில் அதிக ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்த இரண்டாவது பிரதமா் என்ற பெருமையைப் பெற்ற்காக பிரதமா் மோடிக்கு இந்தக் கலந்துரையாடலின்போது ஐக்கிய அரபு அமீரக அதிபா் பாராட்டு தெரிவித்தாா் என்று தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.