அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு
அமர்நாத் யாத்திரை திட்டமிடப்பட்ட ஒருவாரத்துக்கு முன்பே நிறுத்தம்! என்ன காரணம்?
ஸ்ரீநகர் : அமர்நாத் யாத்திரை திட்டமிடப்பட்ட ஒருவாரத்துக்கு முன்பே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை செல்ல ரக்ஷா பந்தன் நாளான ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இந்த யாத்திரை முன்கூட்டியே முடிவடைகிறது.
காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளதன்படி, நாளைமுதல்(ஆக. 3) அமர்நாத் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து, காஷ்மீர் கோட்ட ஆணையர் விஜய் குமார் பிதூரி இன்று(ஆக. 2) வெளியிட்டுள்ள அறிக்கையில்:
அண்மையில் பெய்துள்ள கனமழையால் மோசமான வானிலை நிலவுவதாகவும், இதனால் யாத்திரை பாதைகள் சேதமடைந்திருப்பதாகவும் அங்கு பராமரிப்பு பணிகள் மேர்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரைக்கு வரையறுக்கப்பட்டுள்ள பால்டல், பஹல்காம் ஆகிய இரு வழித்தடங்களிலும் ஆக. 3 முதல் அதிக பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் உதவியுடன் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் இரு வழித்தடங்களிலும் அமர்நாத் யாத்திரை செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The annual Amarnath Yatra in Kashmir closed a week before it was to end.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.