உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் காணாமல்போன மூன்று சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிறன்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவர்கள் மூன்று பேர் காணாமல் போயுள்ளனர். அதன் பின்னர் திறந்தவெளியில் மூன்று சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பீதியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இறந்த சிறுவர்கள் மான்வி (8), ஷிபு (8) மற்றும் ரித்திக் (8) ஆகிய மூவர் ஆவார். உடல்களை மீட்ட போலீஸார் கடத்தி கொலை செய்துள்ளதாக சர்தானா வட்ட அதிகாரி அசுதோஷ் குமார் கூறினார்.
உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன, அறிக்கை வந்த பிறகு இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என்று அவர் கூறினார்.
மூன்று சிறுவர்களும் தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களில் இருவர் உள்ளூர் பள்ளிகளில் படித்து வருவதாகவும், ஒரு சிறுவன் இன்னும் பள்ளிக்குச் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.
போலீஸார் அனைத்து கோணங்களிலும் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.