சுட்டுக் கொலை 
இந்தியா

பிஜாப்பூரில் நடந்த என்கவுண்டரில் நக்சல் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் நக்சலைட் உயிரிழப்பு..

இணையதளச் செய்திப் பிரிவு

சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் புதன்கிழமை பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுண்டரில் நக்சலைட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு சென்றிருந்தபோது மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் மோதல் ஏற்பட்டதாகவும், அந்த மோதலில் நக்சல் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை ஆய்வாளர் சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

ஆயுதத்துடன் கூடிய ஒரு நக்சலைட்டின் உடல் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

சமீபத்திய நடவடிக்கையுடன், சத்தீஸ்கரில் இந்தாண்டு இதுவரை 227 நக்சலைட்டுகள் என்கவுண்டர்களில் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் பஸ்தர் பிரிவில் உள்ளனர்.

A Naxalite was killed in an encounter with security forces in Chhattisgarh's Bijapur district on Wednesday, a senior police official said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகைச்சி?

தவெக தலைவர் விஜய்க்கான பாதுகாப்பு உயர்த்தப்படுகிறதா?

மணிப்பூரில் 3 மாவட்டங்களில் 10 தீவிரவாதிகள் கைது!

ஒரு சவரன் 88 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

தங்கம் விலை புதிய உச்சம்: பவுனுக்கு ரூ.400 உயர்வு

SCROLL FOR NEXT