இந்தியாவில், அமெரிக்க தொழில் அதிபர் எலான் மஸ்க்கின் மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் இரண்டாவது விற்பனையகம் வரும் ஆக.11 ஆம் தேதி தில்லியில் திறக்கப்படுகின்றது.
மின்சார வாகன உற்பத்தியில் முன்னிலை வகித்து வரும், டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் அதன் முதல் விற்பனையகக் கிளையை, கடந்த ஜூலை மாதம் மும்பையில் திறந்தது. இதனை, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் திறந்து வைத்தார்.
இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் இரண்டாவது விற்பனையகம் தேசிய தலைநகர் தில்லியில், ஏரோ சிட்டி பகுதியில் வரும் ஆக.11 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் கால்பதித்து அதன் முதல் விற்பனையகம் திறக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாகவே அதன் இரண்டாவது கிளை திறக்கப்படுவது, வாடிக்கையாளர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
முன்னதாக, மும்பை, புணே, தில்லி மற்றும் குருகிராமம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கும் டெஸ்லா நிறுவனம், அவர்கள் வாங்கும் கார்களை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே டெலிவரி செய்வதாகக் கூறப்படுகிறது.
மேலும், அந்த வாகனங்களை இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பதிவு செய்துக்கொள்வதற்கான வசதியை தற்போது டெஸ்லா நிறுவனம் மேம்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தில்லியில் கனமழை: 100-க்கும் அதிகமான விமானங்கள் தாமதம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.