இந்திய தேர்தல் ஆணைய அலுவலகம் (கோப்புப்படம்). 
இந்தியா

வாக்குத் திருட்டு! தேர்தல் ஆணைய இணையதளத்தில் வாக்காளர் பட்டியல்கள் மாயமா?

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தேர்தல் ஆணைய இணையதளத்தில் வாக்காளர் பட்டியல்கள் நீக்கப்பட்டிருப்பதாகப் புகார்.

இணையதளச் செய்திப் பிரிவு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குத் திருட்டு என்ற அணுகுண்டை ஆதாரங்களுடன் வீசிய நிலையில், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து பல மாநிலங்களின் வாக்காளர் பட்டியல்கள் காணாமல் போயுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

இணையதளங்களில் சில பக்கங்கள் நீக்கப்பட்டதாகவும், வாக்காளர் பட்டியல் நீக்கப்பட்டதாக வெளியாகும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், அனைத்து வாக்காளர் பட்டியல்களும் பொதுவில் யார் வேண்டுமானாலும் அணுகக்கூடியதாகவும் பதிவிறக்கம் செய்யக்கூடியதாகவும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இணையதளப் பக்கத்திலிருந்து வாக்காளர் பட்டியல்கள் ஒரே நாள் இரவில் நீக்கப்பட்டிருப்பதாக எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுப் பதிவை மேற்கோள்காட்டி, இது தவறான தகவல் என்று பதிவு செய்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

யார் வேண்டுமானாலும், இணையதளத்தின் https://voters.eci.gov.in/download-eroll இந்தப் பக்கத்திலிருந்து 36 மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களின் வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.

வியாழக்கிழமை, புது தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்தியில் ஆளும் பாஜகவுன் சேர்ந்துகொண்டு, தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி, பல்வேறு மாநிலங்களில் நடந்துள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கான ஆதாரங்களையும் வெளியிட்டார்.

மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் நடந்த வாக்குப் பட்டியல் முறைகேடு உள்பட சுமார் 1 கோடி மர்ம வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகவும், சிசிடிவி கேமரா பதிவுகள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் குற்றம்சாட்டி அதன் ஆதாரங்களையும் வெளிப்படுத்தியிருந்தார்.

கர்நாடகத்தில் போலியாக 1 லட்சம் வாக்காளர்களின் விவரங்களையும், அவர்கள் எந்தெந்த விதங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஷஸ் தொடரில் கிறிஸ் வோக்ஸ் விளையாடுவாரா?

"பிரதமரால் முடியாதது..! எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல்!": MK Stalin | செய்திகள்: சில வரிகளில் | 09.08.25

தில்லியில் கனமழை - புகைப்படங்கள்

மாநில கல்விக் கொள்கைக்கு கமல்ஹாசன் பாராட்டு

சிம்புவுடனான படம் என்ன ஆனது? வெற்றி மாறன் பதில்!

SCROLL FOR NEXT