எஸ்ஐஆர்: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஜனவரி 30 ஆம் தேதி வரை காலஅவகாசத்தை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்குச்சாவடி அலுவலர்களால் விநியோகம் செய்யப்பட்ட படிவங்கள் அனைத்தும் பெறப்பட்ட நிலையில் கடந்த டிச. 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது.
வரைவு வாக்காளர் பட்டியலில், தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். இதனால் 6,41,14,587-ஆக இருந்த தமிழக மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 5,43,76,756-ஆகக் குறைந்தது.
வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா்கள் நீக்கப்பட்டவா்கள் பெயா் சோ்க்கவும், 18 வயது பூா்த்தி செய்தவா்கள் புதிதாக பெயா் சோ்க்கவும் கடந்த டிச. 19 முதல் ஜன. 18 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில் நேற்று மாலை வரை வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஜன. 30 வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தப் படிவங்கள் சரிபாா்க்கப்பட்டு பிப்.17-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.