உச்ச நீதிமன்றம் 
இந்தியா

ஆதார் என்பது குடியுரிமை சான்று அல்ல: உச்ச நீதிமன்றம் ஏற்பு

ஆதார் என்பது குடியுரிமைக்கான சான்று அல்ல என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம்.

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: ஆதார் என்பது சரியான அடையாள ஆவணம் அல்ல என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

பிகார் சிறப்பு வாக்களர் திருத்தம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.

பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது வாக்காளர்களின் குடியுரிமை ஆவணமாக ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்ற நிபந்தனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.

இந்த பணியில், ‘பிகாரில் கடந்த 2003-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் பெயர் இடம்பெற்றவா்கள், எந்தவொரு ஆதார ஆவணங்களையும் தாக்கல் செய்யத் தேவையில்லை. ஆனால், அந்தப் பட்டியலில் இடம்பெறாத வாக்காளா்கள், தங்களின் குடியுரிமையை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது.

இதை எதிர்த்து பல்வேறு கட்சிகள் மற்றும் ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமனற்ம், பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது வாக்காளர்களின் குடியுரிமை ஆவணமாக ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உச்ச பரிந்துரை செய்திருந்தது.

இது குறித்து பதிலளிக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்தை ஏற்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT