உலகின் முதல் 20 பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் கௌதம் அதானி மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டின்படி, அதானியின் சொத்துமதிப்பு 79.7 பில்லியன் டாலராக உள்ளது.
பங்குச்சந்தையில் சற்று இறக்கத்தைச் சந்தித்தபின் அதானியின் சொத்து மதிப்பு திங்கள்கிழமை சரிவிலிருந்து மேம்பட்டுள்ளது. அதானியின் சொத்து மதிப்பு 2025-இல் மேலும் 1.01 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.
ஓரகிள் நிறுவனத்தின் லேர்ரி எல்லிசன் 305 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் இரண்டாமிடத்திலும், மெட்டா நிறுவனத்தின் மார்க் ஸக்கர்பெர்க் 269 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடனும், ஆமெஸான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ் 243 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடனும் அதற்கடுத்தடுத்த இடங்களில் இந்தப் பட்டியலில் இருக்கின்றனர்.
இந்தியாவின் பணக்கார மனிதரான முகேஷ் அம்பானி அதில் 18-ஆவது இடத்தில் 99.5 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் இருக்கிறார். அதானி 20-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அதுசரி உலக கோடீஸ்வரராக முதலிடத்தில் கோலோச்சுபவர் யார் தெரியுமா? வேறு யாராக இருக்க முடியும்? 378 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் முதலிடம் வகிக்கிறார் எலான் மஸ்க்..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.