உத்தரப் பிரதேசத்தில் ராக்கி கட்டிய உறவுக்கார தங்கையை அவரது அண்ணன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அவுரியா பகுதியில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்குச் சென்றுள்ளார் சுர்ஜீத்(33). கடந்த சனிக்கிழமை ரக்ஷா பந்தன் விழாவையொட்டி சித்தப்பாவின் மகளான தங்கை உறவுமுறை கொண்ட 14 வயது சிறுமி, அண்ணனான சுர்ஜீத்திற்கு கையில் ராக்கி கயிறு கட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினமே இரவு சுர்ஜீத் நன்றாக குடித்துவிட்டு மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அறையில் படுத்திருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.
பின்னர் சிறுமியை தூக்கிலிட்டதுபோல அவரை தூக்குக்கயிறில் போட்டுள்ளார்.
அடுத்த நாள் காலை, பக்கத்து அறையில் படுத்திருந்த சிறுமியின் அப்பா வந்து சிறுமியின் உடலைப் பார்த்து கதறி அழுதுள்ளார். பின்னர் காவல்துறையில் புகார் கொடுக்க, விசாரணையில் சுர்ஜீத் குற்றவாளி என்பது தெரிய வந்தது. உடனடியாக அவரைக் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
விசாரணையின்போது போலீசாரை திசைதிருப்பும் விதமாக சுர்ஜீத் பேசியுள்ளார். குடும்பத்தில் மற்றவர்களிடம் கேள்வி கேட்கும்போது சுர்ஜீத் பதிலளித்துள்ளார். சந்தேகமடைந்த போலீசார் பின்னர் விசாரணையில் சுர்ஜீத் குற்றவாளி என்பதை அறிந்தனர்.
பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.