கோப்புப் படம் 
இந்தியா

நடப்பு நிதியாண்டில் 10,660 கி.மீ. நெடுஞ்சாலை: அமைச்சர்

நடப்பு நிதியாண்டில் மட்டும் 10,660 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் அஜய் தம்தா தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

நடப்பு நிதியாண்டில் மட்டும் 10,660 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் அஜய் தம்தா தெரிவித்துள்ளார்.

2025–26 நிதியாண்டில் 10 ஆயிரம் கி.மீ. வரை சாலை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான நிலையான தொழில்நுட்பங்கள் மற்றும் முன்னேற்றத்துக்கான மாநாடு மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.

செப்டம்பர் 3 - 4 தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில், இணை அமைச்சர் அஜய் தம்தா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். சாலை போக்குவரத்து மேம்பாட்டிற்கு உதவும் வகையிலான புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சவால்கள் குறித்து விவாதிப்பதற்காக கொள்கை வகுப்பாளர்கள், பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

நெடுஞ்சாலைத் துறையானது நீடித்த பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை உறுதி செய்வது குறித்து அமைச்சர் அஜய் தம்தா பேசியதாவது,

சுதந்திரமான ஆய்வுக் கூடங்கள், வழக்கமான தணிக்கைகளால் ஒப்பந்ததாரர்கள் மற்றும் மேற்பார்வை அதிகாரிகளின் மூலம் சாலை தரத்தை மேம்படுத்தும் பணிகளை அமைச்சகம் செய்து வருகிறது.

மேலும், தேசிய நெடுஞ்சாலைச் சட்டம் பிரிவு 3 ஜி - யின் படி, சாலை அமைப்பதற்கு நிலங்களை வழங்கியவர்களுக்கு 90% இழப்பீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அமைக்கப்பட்டுவரும் சாலைப்பணிகளின் தரமும் ஒப்பந்ததாரர்களின் செயல்பாடுகளும் பரந்த ஆய்வின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தில்லி - மீரட், கிழக்கு புறவசி விரைவுச் சாலை, அகமதாபாத் - வதோதாரா நெடுஞ்சாலை என 8,391 கி.மீ. சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 2,242 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை உள்பட 5,109 கி.மீ. விரைவுச் சாலைகள் அடங்கும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க | ஆக.21 மாஸ்கோவில்.. ரஷியா - இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு!

India builds 10,660 Km of highways in FY25, Eyes Rs 3 trillion push, Road Minister Ajay Tamta

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேருந்துக்காக நின்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்தவா் கைது

விழுப்புரம் தனியாா் பள்ளியில் மாணவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

சென்னையில் நள்ளிரவில் பரபரப்பு! தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய காவல் துறை!

வாகனம் மோதி காயமடைந்த புள்ளி மான்

உழவா்கரை தொகுதியில் ரூ.77 லட்சம் மதிப்பில் பாலம் கட்ட பூமி பூஜை

SCROLL FOR NEXT