ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வாரில் மேகவெடிப்பு... PTI
இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு! 12 பேர் பலி!

ஜம்மு - காஷ்மீரில் ஏற்பட்ட மேகவெடிப்பால் 12 பேர் பலியாகியுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி சுமார் 12 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிஷ்த்வார் மாவட்டத்தில் இருந்து 90 கி.மீ. தூரத்தில் 9,500 அடி உயரத்தில் அமைந்துள்ள சஸோட்டி கிராமத்தில், இன்று (ஆக.14) மதியம் 12 மணியளவில் மேகவெடிப்பு ஏற்பட்டு திடீர் வெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

கிஷ்த்வாரில், மலை மீது இருக்கும் மசாயில் மாதா கோயிலுக்கு, செல்லும் வழியில் அமைந்துள்ள கடைசி கிராமம் சஸோட்டி. அங்கிருந்து சுமார் 8.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொள்ள ஏராளமான பக்தர்கள் அங்கு திரண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியான 12 பேரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. எனவே, இந்தப் பேரிடரால் பலியானோரது எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் மசாயில் மாதா கோயிலை நோக்கி நடத்தப்படும் புனித யாத்திரை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டதுடன், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கிஷ்த்வாரில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்துடன், அப்பகுதியில் அமைந்திருந்த ஏராளமான வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவதுமாக நிறைவடைய சுமார் 20 நாள்கள் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: கர்நாடக முன்னாள் டிஜிபி கொலை.. குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்

At least 12 people have been reported dead in flash floods caused by cloudbursts in Jammu and Kashmir's Kishtwar district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவண்ணாமலையில் ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை: காவலர்கள் பணிநீக்கம்

பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு! அண்ணாமலை குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலி!

தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT