இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மீது 25 சதவிகித வரியை விதித்தார். இருப்பினும், தனது நீண்டகால நட்பு நாடான ரஷியாவிடம் இந்தியா தொடர்ந்து எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டது.
இதனையடுத்து, இந்தியா மீது மேலும் 25 சதவிகித வரியை டிரம்ப் விதித்தது உலக பொருளாதார நாடுகளிடையேயும் பேசுபொருளாகியது.
இதனிடையே, ரஷியா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்தும் பேச்சுவார்த்தையில் டிரம்ப்பும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் நாளை ஈடுபடவுள்ளனர்.
இந்த நிலையில், அலாஸ்காவில் நடைபெறும் நாளைய பேச்சுவார்த்தையில் ரஷியாவுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், இந்தியா மீதான வரி மேலும் அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்காட் பெசண்ட் கூறுகையில், ரஷியாவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லையெனில், வரி அதிகரிக்கப்படலாம். ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.