பிரதமர் நரேந்திர மோடி கோப்புப் படம்
இந்தியா

2029 தேர்தலிலும் மோடியே பிரதமர் வேட்பாளர்! பாஜகவின் நிலைப்பாட்டுக்கு ஆர்எஸ்எஸ் பதில் என்ன?

அடுத்த மக்களவைத் தேர்தலிலும் மோடிதான் பிரதமர்; ஆர்எஸ்எஸ் - பாஜக இடையே மோதல் ஏற்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து

இணையதளச் செய்திப் பிரிவு

அடுத்த மக்களவைத் தேர்தலிலும் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற பாஜகவின் நிலைப்பாட்டால், ஆர்எஸ்எஸ்ஸுடனான நல்சூழலில் கசப்பு ஏற்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

அரசியலில் இருப்பவர்களுக்கு 75 வயதானால், அவர்கள் ஓய்வுபெற வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் வரையறை. அந்த வகையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் (பாஜக) இந்தாண்டுடன் 75 வயதாகவுள்ளது. ஆகையால், அவர்கள் இருவரும் ஓய்வுபெறுவார்களா? என்ற கேள்வி எழுவதற்கு முன்னதாகவே, தனது ஓய்வை மோகன் பகவத் உறுதிப்படுத்தினார்.

இருப்பினும், பிரதமர் மோடியின் ஓய்வுகுறித்து எதுவும் இன்னும் எட்டப்படவில்லை. இதனிடையே, ஜூலை மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், அரசியல் இருப்பவர்களுக்கு 75 வயதானால், மற்றவர்களுக்கு நீங்கள் வழிவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

இதன்மூலம், பிரதமர் மோடியைத்தான் அவர் மறைமுகமாகக் குறிப்பிடுவதாகக் கருத்துகள் நிலவின.

இந்த நிலையில், 2029 மக்களவைத் தேர்தலிலும் மோடிதான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இடையிலான நல்சூழலில் கசப்பு ஏற்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இரு தரப்புக்கும் இடையிலான நிலைப்பாட்டை கனிவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையேதான், இன்றைய சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் ஆர்எஸ்எஸ் குறித்தும் பிரதமர் மோடி சில உரைகளை ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பாவாடை உற்சவம்

தோளப்பள்ளி, குருவராஜபாளையத்தில் கிராம சபைக் கூட்டம்

விஜிலாபுரம் அரசு மதுக்கடையை அகற்ற கிராம சபைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

பொதுப் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா்

155 பயனாளிகளுக்கு ரூ.2.50 கோடி நலத்திட்ட உதவிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

SCROLL FOR NEXT