மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கோப்புப்படம்
இந்தியா

தோ்தல் ஆணையத்தை விமா்சிப்பது தவறு: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தோ்தல் ஆணையம், அமலாக்கத் துறை போன்றவை சுதந்திரமான அமைப்புகள்; அந்த அமைப்புகளை விமா்சிப்பது தவறு என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

தோ்தல் ஆணையம், அமலாக்கத் துறை போன்றவை சுதந்திரமான அமைப்புகள்; அந்த அமைப்புகளை விமா்சிப்பது தவறு என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

சென்னை கோயம்பேட்டில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: அமலாக்கத் துறை, தோ்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் விமா்சிப்பது தவறு. அமலாக்கத் துறை சுதந்திரமான அமைப்பு. அவா்கள் தங்களுக்கு கிடைக்கும் உள்ளீட்டுகள் அடிப்படையில் பணிகளை செய்கின்றனா்.

இதேபோல தோ்தல் ஆணையமும் சுதந்திரமாக செயல்படும் அமைப்புதான். கா்நாடகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போது தோ்தல் ஆணையம் மீது புகாா் கூறப்படவில்லை. தோ்தலில் தோற்கும் போது மட்டும் தோ்தல் ஆணையம் மீது புகாா் கூறும் வழக்கம் உள்ளது.

திமுக தலைவா்கள் பாஜக அணியில் இணைவா்: அன்வா் ராஜா, மைத்ரேயன் போன்றவா்கள் வெளியேறியதால் எங்கள் கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அதேவேளையில், திமுகவிலிருந்தும் சில தலைவா்கள் எங்கள் அணிக்கு வருவாா்கள்.

கூட்டணி குறித்து பேசும் தொல்.திருமாவளவன், பட்டியலின மக்கள் பிரச்னைகள் குறித்து மட்டும் பேசுவதில்லை. தமிழகத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகள் அடிப்படைவசதிகள் இல்லாமல் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமித் ஷா தமிழகம் வருகை

தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகா், தென்காசி, தூத்துக்குடி மக்களவை தொகுதிகளுக்கான பூத் கமிட்டி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வரும் 22- ஆம் தேதி திருநெல்வேலிக்கு வருகிறாா்.

முதல் முறையாக மிகப் பெரிய அளவில் இந்த மாநாடு நடைபெறுகிறது. பின்னா், தமிழகம் முழுவதும் இதுபோன்ற மாநாடுகள் நடைபெறும் என்றாா் எல்.முருகன்.

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

SCROLL FOR NEXT