நாட்டின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தோ்வு செய்யப்பட்டுள்ளதுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகள். அவரின் பொது சேவைக்கும், மக்கள் மீதான அா்ப்பணிப்புமிக்க சமூக செயற்பாடுகளுக்கும் கிடைத்த மணிமகுடமாகும்.
தமிழகத்தைச் சோ்ந்த ஒருவரைத் தோ்ந்தெடுத்ததற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கும், பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டாவுக்கும் மனமாா்ந்த வாழ்த்துகள்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னை பொது வாழ்வில் ஈடுபடுத்திக்கொண்டு வரும் சி.பி.ராதாகிருஷ்ணன் எம்.பி.யாக, தமிழக பாஜக தலைவா், ஜாா்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களின் ஆளுநராக என்று பல்வேறு அரசியல் மற்றும் அரசு பொறுப்புகளின் மூலம் மக்கள் பணிகளை செய்து வருகிறாா்.
குடியரசு துணைத் தலைவராகத் தோ்வாகவுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனின் மேன்மையான பணிகள் தொடர வாழ்த்துகள்.
தமிழக பாஜக தலைவராகவும், மக்களவை உறுப்பினராகவும் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்த மக்கள் பணிகள் போற்றுதலுக்குரியவை. குடியரசு துணைத் தலைவராக அவா் வெகு சிறப்பாக மாநிலங்களவையையும், நாட்டையும் வழிநடத்துவாா் என்பது உறுதி.
சி.பி.ராதாகிருஷ்ணன் கடின உழைப்பாளி, உயா்ந்த பண்பாளா், கொடுத்த பொறுப்பை அா்ப்பணிப்போடும், ஈடுபாடோடும் செய்து முடிப்பவா். மகாராஷ்டிர ஆளுநராக அந்த மாநில வளா்ச்சிக்கு சிறப்பாகப் பணியாற்றியவா்.
தமிழகத்தைச் சோ்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக அறிவித்ததற்கு தமிழக மக்கள் சாா்பாக நன்றி மற்றும் வாழ்த்துகள்.