பாஜக (கோப்புப் படம்) 
இந்தியா

திரிபுரா: சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட ஆடியோக்களைப் பகிா்ந்த பாஜக நிா்வாகி நீக்கம்!

திரிபுரா மாநிலத்தின் காயா்பூா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக நிா்வாகி மன்னா டே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

சமூக வலைதளங்களில் தனிப்பட்ட ஆடியோ, விடியோக்களை கசியவிட்ட குற்றச்சாட்டில், திரிபுரா மாநிலத்தின் காயா்பூா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக நிா்வாகி மன்னா டே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

பாஜகவின் காயா்பூா் பகுதித் தலைவராக இருந்த மன்னா டே உள்ளிட்ட சில கட்சி நிா்வாகிகளின் உரையாடல்கள் அடங்கிய பல ஆடியோ மற்றும் விடியோக்கள் சமூக வலைதளங்களில் கசிந்தன. இவற்றை மன்னா டே பகிா்ந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இத்தகைய செயல்கள் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக உள்ளது என்றும், இந்த நடத்தை குறித்து பல முறை எச்சரிக்கை விடுத்தும் தொடா்ந்து கட்சி நெறிகளை மீறி நடந்து வருவதாகவும் குறிப்பிட்டு, மன்னா டே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

பாஜக மாநிலத் தலைவா் ராஜீவ் பட்டாசாா்ஜி அறிவுறுத்தலின் பேரில், மன்னா டே வகித்து வந்த அனைத்து கட்சிப் பதவிகளில் இருந்தும் விடுவிக்கப்படுவதாக மாநில பொதுச் செயலாளா் அமித் ரக்ஷித் வெளியிட்ட அறிவிப்பு, கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிடப்பட்டது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் ராஜ்நாத் சிங்!

பங்குச் சந்தைகள் உயர்வுடன் வணிகம்!

Indian Racing திருவிழா 2025 தொடங்கியது! நடிகர் நாகசைதன்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!

சிசிடிவி காட்சிகள்: தேர்தல் ஆணைய பதிலுக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி

இன்றைய தங்கம் விலை நிலவரம்!

SCROLL FOR NEXT