மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
மும்பை கடந்த இரண்டு நாள்களாக கனமழை தொடர்ந்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்காக மாறியுள்ளது. கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.
அந்தேரி சுரங்கப்பாதை மற்றும் லோகண்ட்வாலா வளாகம் போன்ற சில தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெருநகரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் உள்ளூர் ரயில்கள் 15 முதல் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக அதிகாரிகள், பயணிகள் தெரிவித்தனர்.
மும்பை மற்றும் தாணே, ராய்காட் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது, இன்றும், நாளையும் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் கணித்துள்ளது. இன்று ரத்னகிரி மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கையையும், நாளை சிந்து துர்க்கிற்கு ஆரஞ்சு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
கனமழைக்கு இதுவரை இருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் காலை 9 மணி முதல் ஒரு மணி நேரத்தில் முறையே 37 மிமீ, 39 மிமீ மற்றும் 29 மிமீ சராசரி மழை பதிவாகியுள்ளது. கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள செம்பூரில் அதிகபட்சமாக 65 மிமீ மழையும், சிவாஜி நகரில் 50 மிமீ மழையும் ஒரு மணி நேரத்தில் பதிவாகியுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில், தீவு நகரத்தில் சராசரியாக 54.58 மிமீ மழையும், கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் 72.61 மிமீ மழையும், மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 65.86 மிமீ மழையும் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பல பகுதிகளில் 100 மி மீக்கும் அதிகமான மழைப் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.