முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி, அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உருக்கமான கருத்தை பகிர்ந்துள்ளார்.
நாடு முழுவதும் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், ராஜீவ் காந்தி பிறந்த நாளன்று ராகுல் காந்தி சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவில்,
“இந்தியா என்பது ஒவ்வொரு குடிமகனும் மதிக்கப்படுகிற நல்லெண்ணம் இருக்கும் இடத்தில், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பால் வலுவாக நிற்கிறது.
அப்பா, உங்கள் கனவை நிறைவேற்றுவதே என் வாழ்க்கையின் குறிக்கோள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தில்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் பிரியங்கா காந்தி, ப. சிதம்பரம் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பிகாரில் வாக்குரிமைப் பேரணியில் ஈடுபட்டு வரும் ராகுல் காந்தியால், இந்த நிகழ்வில் நேரடியாகப் பங்கேற்க முடியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.